திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ரூபாய் 18. 44 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் , புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூபாய் 46.25 கோடி மதிப்பீட்டில் 1576 பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 1576 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி உட்பட அரசு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *