திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் தேசிய பாடலான வந்தே மாதரம் வெளிவந்து 150 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி இந்த நாளை நினைவு கூறும் வகையில் வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள், 200-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தே மாதரம் பாடலின் முழு பதிப்பை பாடினார்கள். பின்னர் ரெயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி தலைமை தாங்கி பள்ளி மாணவ மாணவிகள் ரயில்வே ஊழியர்கள் அதிகாரிகள் ரயில்வே போலீஸ்சாருடன் சேர்ந்து தேசிய கீதமான வந்தே மாதரம் பாடலை பாடினர். அதனை தொடர்ந்து தேசியக்கொடியான மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். இதை தொடர்ந்து மாணவ- மாணவிகள் தேசிய கொடியினை அசைத்து உற்சாகப்படுத்தினர்.
