19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட காது கேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சேர்மன் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலத் தலைவர் ரமேஷ் பாபு, துணைத் தலைவர் குமார், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் துணைச்செயலாளர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-
காது கேளாதோருக்கு 80 சதவீதத்திற்கு மேல் விழுக்காடு உள்ளவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ல் தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு வரிசை அடிப்படையில் அரசுத்துறையில் 1% வேலை வாய்ப்பு தர வேண்டும், மாத உதவித்தொகையை வருவாய்த்துறைக்கு பதிலாக மாற்றுத்திறனாளி துறை மூலம் மாற்றி 3000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும், மேலும் காது கேளாதவருக்கு ஆவின் பாலகம் அமைத்து தர வேண்டும், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பாக பிரதிநிதிகள் மாநில நல வாரியத்தில் நியமனம் செய்யக் கோரியும், காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டோம் பல மாதங்கள் ஆகியும் இன்னும் முகம் நடத்தப்படாததை கண்டித்தும், இலவச தையல் எந்திரம் பெறுவதற்கு 40 வயதிலிருந்து அறுபது வயது வரை நீடிக்கப்படுவதை போல் அலைபேசி வழங்குவது 60 இலிருந்து 70 வயது வரை நீடிக்க வேண்டும், மேலும் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதல்வரை சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் வாய் திறந்து கோஷங்கள் எழுப்ப முடியாத காரணத்தால் தங்கள் வாயில் விசில் வைத்து தங்களின் கண்டன ஒலி எழுப்பி கோரிக்கைகளை பதிவு செய்தனர்.