திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிராட்டியூர் வழி பிரியும் முகப்பில் அருள்மிகு ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இந்த கோவில் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் உள்ளே இருந்த 2 அடி உயரமுள்ள விநாயகர் கற்சிலை திருடப்பட்ட இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் திருடப்பட்ட விநாயகர் சிலை அருகில் உள்ள தாமரை குளத்தில் இடுப்பு பகுதியை உடைத்து வீசப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருச்சி நீதிமன்ற அமர்வு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து விநாயகர் சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அந்த கோவிலில் இரண்டடி உயரமுள்ள விநாயகர் சிலை புதிதாக வைக்கப்பட்டுள்ளது.