கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக திருச்சி மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 3829 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 784 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 597 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர். மேலும் திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4010 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் திருச்சி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.