திருச்சி நாகமங்கலம் பகுதியில் உள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் திருச்சியில் முதன் முறையாக கர்ப்பிணி கரு வளர்ச்சி கண்டறியும் புதிய வால்யூசன் எக்ஸ்பர்ட் வியூபாய்ண்ட் என்ற அல்ட்ராசவுண்ட் கருவியினை அறிமுகம் மற்றும் சிசு நலன் பிரிவு துவக்க நிகழ்ச்சி மருத்துவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் விஸ்வநாதன்கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களின் கரு வளர்ச்சி கண்டறியும் புதிய கருவியை துவக்கி வைத்து பேசுகையில்:- கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப நாட்களில் ஏற்படும் பல்வேறு பரிசோதனை மற்றும் நோய் தாக்கப்பட்டால் சிசு பாதிக்கப்படாமல் சிகிச்சை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

கருநல மையத்தின் மருத்துவர்  ரேவதி சந்திரசேகர் பேசுகையில் :- 5வது வாரத்தில் இருந்து குழந்தை வளர்ச்சியை காணலாம்.5வது மாதத்தில் உறுப்புகள் வளர்ந்து விடும். தொடர்ந்து வளர்ச்சி எற்படும். இதனை கவனிக்க வேண்டும். 11-13வது வாரம் நூக்கல் ஸ்கேன் எடுப்பதன் மூலம் வளர்ச்சியின் பிரிமாணத்தை மரபணு பரிசோதனையில் உடல் உறுப்புகளின் குறைபாடுகளையும், குழந்தையின் இருதயத்தின் செயல்பாடுகளையும் காணலாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில்பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் சிறப்பு மருத்துவர்கள் ஷாமிலி, ஷேக் அப்துல்லா, மகேஸ்வரன், குணசேகரன் மற்றும்நிர்வாக இயக்குனர் சசிபிரியா, தொழுநோய் துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் கமலம் கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்