திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே மைதானத்தில் SSS என்டர்டைன்மென்ட் சார்பாக திருச்சியில் முதன்முறையாக ஹாலிவுட் அவதார் பொருட்காட்சி மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியை தினமலர் நாளிதழ் ஆசிரியர் ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருட்காட்சியை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து பொருட்காட்சி நல சங்கத் தலைவர் அன்வர் ராஜா மாநில செயற்குழு உறுப்பினர் சலீம் ஆசிரியர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஹாலிவுட் அவதார் பொருட்காட்சிக்கான ஏற்பாடுகளை SSS என்டர்டைன்மென்ட் உரிமையாளர் சுதாகரன் மற்றும் பாலு ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியின் முகப்பில் ஹாலிவுட் அவதார் சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளே கொலம்பஸ் ராட்டினம் ரோபோடிக் டாக் 3d ஷோ பேய் வீடு வாட்டர் பலூன் படகு சவாரி பலூன் கேம்ஸ் ரோலர் கோஸ்டர் குழந்தைகளை கவரும் விளையாட்டு உபகரணங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் ரயில் நிலையம் உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டு சாதனங்கள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவிக் குழு அரங்குகள் மற்றும் உணவு பொருட்கள் அடங்கிய ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
