திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் நியமனம் பெற்று, பணிஆணைகள் வழங்கும் வகையிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான கே.என். நேரு ஏற்பாட்டில், கேர் பொறியியல் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது.

இதில், உற்பத்தி துறை சார்ந்து முன்னணி நிறுவனங்கள் எம்ஆர்எப், ரானா, செயின்ட் கோபெய்ன், டிவிஎஸ் மோட்டார்ஸ், லூகாஸ், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், யமஹா மோட்டார்ஸ், போஸ்க், மதர்ஸன் உள்ளிட்ட 50-க்கும் மேலான நிறுவனங்கள் பங்கேற்றன. தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து விடார்ட், சுதர்லேண்ட், லாரல்ஸபி, இன்விடஸ் உள்ளிட்ட 30-க்கும் மேலான நிறுவனங்களும்; வங்கி – நிதித்துறையிலிருந்து பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஸிரிராம் பைனான்ஸ் உள்ளிட்ட 20-க்கும் மேலான நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் படித்த பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலந்து கொண்டு பயனடைந்தனர்.முகாமில் மொத்தம் 327 நிறுவனங்களிடம் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே என் நேரு வழங்கி, பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் கேர் பொறியியல் கல்லூரி சி.இ. ஓ செந்தில். மாவட்டகலெக்டர் சரவணன், பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
