திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதன் ஒருபகுதியாக நேற்று 39-வது நாளாக , விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்று கூறி, வெண்டைக்காயை மாலையாக அணிந்தும், சாலையில் கொட்டியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் விவசாயிகள் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரியில் கர்நாடகா அரசு உடனடியாக திறந்து விட வேண்டும். விவசாயிகளின் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வேண்டும். மத்திய – மாநில அரசுகள் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். அதன் படி இன்று தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரியில் கர்நாடகா அரசு உடனடியாக திறந்து விட வேண்டும். விவசாயிகளின் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வேண்டும். மத்திய – மாநில அரசுகள் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் போராட்டத்தில், பாடைகட்டி, உடலில் மருத்துவ சிகிச்சைக்கான துணியை சுற்றிக்கொண்டு, ஒப்பாரிவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக காவல்துறையினரின் தடையை மீறியும், பொதுமக்களுக்கு இடையூறாகவும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் போராட்டம் நடத்திய மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது 7 பிரிவுகளின் கீழ் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாடையை எடுத்துக் கொண்டு காவிரி ஆற்றில் விடப்போவதாக அய்யாகண்ணு தெரிவித்தார் இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாடையை அங்கிருந்து எடுத்துச் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *