திருச்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த பாதையை ரயில்வே நிர்வாக மூடியதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பொன்மலை ரயில்வே காலனி பாதை மீட்பு குழு, அனைத்துக் கட்சி கூட்டமைப்பினர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி பொன்மலை ஒர்க்ஷாப்பில் இருந்து மேலக்கல்கண்டார் கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், கிழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி, பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், திருநகர் பகுதிவாழ் மக்கள் வழிபாட்டு தளங்களையும், ரயில்வேகாலனி பாதைகளையும், பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம் இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பு ஏதுமின்றியும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மேல கல்கண்டார் கோட்டை செல்லும் 4 வழித்தடங்களின் பாதைகளை திடீரென ரயில்வே நிர்வாகம் மூடி வருவது பெரும் அதிர்ச்சியையும். பீதியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடும்படியாக, ரயில்வே ஊழியர்களும், பொதுமக்களும் பள்ளிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு அலுவலகங்களுக்கு, ஞாயிறு சந்தைக்கு மற்றும் ஏனைய அனைத்து தேவைகளுக்கும் இப்பாதைகளை 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றோம்

தற்போது, ரயில்வே யார்டு விரிவாக்கத்திற்காக, திடீரென பாதைகள் அடைக்கப்படுவதால் மிகுந்த அசௌகரியத்திற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வணிகர்கள் மத்தியில் பெருத்த பின்னடைவையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ரயில்வே கோட்ட மேலாளர் அவர்கள் வழித்தடங்களை அடைக்காமல் பொதுமக்களின் நலன் கருதி பழைய போக்குவரத்தை தொடர உதவக் கோரி மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்