சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7 – வது ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு .. *ஆகஸ்ட் 3 ஆம் தேதி வியாழன்* மாலை 4 மணிக்கு – தென் கொரியா vs ஜப்பான் மாலை 6.15 – மலேசியா vs பாகிஸ்தான் இரவு 8.30 – இந்தியா vs சீனா அணிகள் மோதுகிறது. *ஆகஸ்ட் 4 ஆம்தேதி வெள்ளி* மாலை 4 மணி – தென்கொரியா vs பாகிஸ்தான் மாலை 6.15 மணி – சீனா vs மலேசியா இரவு 8.30 மணி – இந்தியா vs ஜப்பான் *ஆகஸ்ட் 5 ஆம் தேதி சனி ஓய்வு நாள்**ஆகஸ்ட் 6 ஆம் தேதி திங்கள்* மாலை 4 மணி – சீனா vs தென்கொரியா மாலை 6.15 மணி – பாகிஸ்தான் vs ஜப்பான் இரவு 8.30 மணி – இந்தியா vs மலேசியா

 *ஆகஸ்ட் 7 ஆம் தேதி செவ்வாய்* மாலை 4 மணி – ஜப்பான் vs மலேசியா மாலை 6.15 மணி – பாகிஸ்தான் vs சீனா இரவு 8.30 மணி – இந்தியா vs தென்கொரியா *ஆகஸ்ட் 8 ஆம் தேதி புதன் ஓய்வு நாள்* *ஆகஸ்ட் 9 ஆம் தேதி வியாழன்* மாலை 4 மணி – ஜப்பான் vs சீனா மாலை 6.15 மணி – மலேசியா vs தென்கொரியா இரவு 8.30 மணி – இந்தியா vs பாகிஸ்தான் *ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெள்ளி ஓய்வு நாள்* *ஆகஸ்ட் 11 ஆம் தேதி சனி கிழமை*மாலை 3.30 மணி – 5 மற்றும் 6 ஆம் இடத்திற்கான போட்டி மாலை 6 மணி – முதல் அரையிறுதி இரவு 8.30 – 2 ஆவது அரையிறுதி. *ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஞாயிறு கிழமை* மாலை 6 மணி – 3 மற்றும் 4 ஆம் இடத்திற்கான போட்டி இரவு 8.30 – இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான கோப்பையை திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் hero Asian champion trophy யை தமிழ்நாடு நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மேயர் அன்பழகன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் இணைந்து கோப்பையை அறிமுகபடுத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஹாக்கி விளையாடினர். மேலும் ஹாக்கி வீரர் வீராங்கனைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.ஹீரோ ஏசியன் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இந்த போட்டி நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்