திருச்சி அப்போலோ மருத்துவமனையில் இதயத்தில் துளைகள் அல்லது வாழ்வு கோளாறுகள் போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. கடுமையான மாரடைப்பு நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் அவசரகால முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டிகள் மற்றும் FFR மூலம் எல்லைக்கோடு புண்களின் முக்கியத்துவத்தை தெளிவாக கண்டறிய உதவுகிறது. இந்த சிகிச்சை ஆஞ்சியோ பிளாஸ்டி தேவையா இல்லையா என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்க உதவும். ஆகையால் திருச்சியின் முதல் முறையாக இதய நோயாளிக்கு பிரத்தியேகமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனால் பலர் பயன்பெற்று இன்று முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் விஜய் சேகர் பேசுகையில்..
எங்களின் வெற்றிகரமான எலக்ட்ரோ பிசியாலஜி ஆய்வுகள் மற்றும் அரித்மியா சிகிச்சைக்கான ரேடியோ அலைவரிசை ஆம்புலன்ஸ் மேம்பட்ட 3d மேப்பிங் தொழில்நுட்பத்தின் மூலம் அதிநவீன வசதிகளை நாங்கள் வழங்கி வருகிறோம். இது போன்ற அதிநவீன கருவிகளின் மூலம் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலான நோய்களை சுலபமாக கண்டறியவும் குழந்தை மருத்துவம் செய்ய உதவுகிறது. இந்த நடைமுறைகள் திருச்சியில் தான் முதன்முறையாக செயல்பட்டு உள்ளன . மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் எலக்ட்ரோ பிசியாலஜி துறையில் எங்களின் பணி அங்கீகரிக்கப்பட்டு சிறந்த விருது வழங்கப்பட்டது. இந்த சிகிச்சையின் மூலம் இதயத்தில் உள்ள குழாயில் அடைப்பு இதய கோளாறு உள்ளிட்டவற்றை சுலபமாக சரி செய்ய முடியும் என தெரிவித்தார்.
மேலும் இவர்களை தொடர்ந்து பேசிய இதய அறிவியல் டாக்டர் ரவீந்திரன் மற்றும் ஷாம் சுந்தர் கூறுகையில்..
பெர்குடேனியஸ் அயோர்டிக் வால்வ் இம்ப்லாண்டேஷன் போன்ற அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு அடிக்கடி செய்யப்படுகிறது. OCT லைட் கேமரா ரத்த நாளங்களில் உள்ள கால்சியத்தின் அளவை மிகத் துல்லியமாக வரையறுத்து, கொலஸ்ட்ரால் பிளேக்கின் தன்மையை புரிந்து கொண்டு ரத்தக்குழாயின் சரியான அளவை கூறுகிறது. மேலும் ஆஞ்சியோ பிளாஸ்டியின் போது சரியான ஸ்டென்ட் தேர்வு செய்ய இதய நோய் நிபுணருக்கு இது உதவும். ரத்தக்குழாயின் செயலிழப்பை நோயாளிகள் இந்த சிகிச்சை மேற்கொள்வது மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு தரத்தை உயர்த்த உதவும் என்றார்.