கொரோனோ காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த படிப்புக்களும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது, இந்நிலையில் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் வகுப்புக்கள் இன்று முதல் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் செயல்படும் என அறிவித்தது.
இதனை தொடர்ந்து இன்று திருச்சி கி.ஆபெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் 2ம்ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியது. திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் 600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் 600 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று 80 சதவீத மாணவ மாணவிகள் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் 4குழுக்களாக 150பேராக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டு மாணவர்கள் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.