தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்து ரூபாய் 12 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா,
32 படுக்கைகளுடன் கூடிய ECRP-II தீவிர சிகிச்சை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து, ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும்,
அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தது உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மருத்துவ மனை டீன் நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், அப்துல்சமது, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்