திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டையில் அமைந்து அருள் பாலித்து வரும் வரகனேரி அம்பலம் பங்காளிகளுக்கு சொந்தமான அருள்மிகு அடைக்காயி அம்மன் திருக்கோயில் மகா சண்டி ஹோமம் இன்று நடைபெற்றது.
முன்னதாக கடந்த ஒன்பதாம் தேதி ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாரதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் மாலை மங்கள இசையுடன் முதல் கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜை, வேதிகா அர்ச்சனை, சண்டி ஹோமம் ஆரம்பிக்கப்பட்டு கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, மங்கள திரவிய பட்டுப் புடவை சமர்ப்பணம், மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இந்த மகா சண்டி ஹோமம் நிகழ்ச்சியில் பக்த கோடிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு அடைக்காயி அம்மன் அருள் பெற்று சென்றனர்