திருச்சி சையது முர்துஷா பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வினோத் வயது 45 இவர் மண்ணச்சநல்லூரில் தனது மனைவி மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மகனுடன் வசித்து வருகிறார். மேலும் கடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர்களின் வினாத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர் வினோத் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் பிளஸ் 2 மாணவர்களின் வினாத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்னையில் உள்ள கல்வித் துறையில் இருந்து ஆசிரியர்களுக்கு தனி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து 4-ம் தேதி பேருந்து மூலம் சென்னை சென்ற ஆசிரியர் வினோத் அங்கிருந்து கல்வி துறை அலுவலகத்திற்கு சென்றபோது வாகன விபத்தில் படுகாயம் அடைந்தார் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர் கடந்த இரண்டு நாட்களாக மூளை சாவு அடைந்திருந்த ஆசிரியர் வினோத் நேற்று மரணமடைந்தார்.
ஆசிரியர் சங்கத்தினர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் :-
தமிழக கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் 2-நாட்கள் நடைபெறுவதாக திடீரென அறிவிக்கின்றனர். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது இதனால் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக அவசர அவசரமாக பல்வேறு பணிகளுக்கு மத்தியில் கிளம்பும் ஆசிரியர்கள் இரண்டு நாள் பயிற்சி என கூறுவதால் சிறிய அளவிலான உடைமைகளை எடுத்து செல்கின்றனர் ஆனால் அங்கு சென்றதும் 4 அல்லது 5 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதனால் ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு அரசு சரியான தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.