திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் திருவானைக்கோவில், திம்மராய சமுத்திரம் பகுதியில் ஆனைமலைஸ் டொயோட்டோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டொயோட்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அர்பன் க்ரூஸர் “ஹைரைடர்” ஹைபிரிட் கார் அறிமுக விழா நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் துறை ஸ்ரீரங்கம் சரக உதவி ஆணையர் நிவேதா லட்சுமி புதிய காரை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் நிறுவனத்தின் சி.இ.ஒ வெங்கடேசன், கிளை மேலாளர் ஆன்டனி ராஜ் மற்றும் நிர்வாக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யுசி- ஹைரைடர் கார் குறித்து சிஇஓ வெங்கடேசன் கூறுகையில், எஸ்யூவி ரக காரான ஹைரைடர் நவீன செல்ஃப் சார்ஜிங் ஹைபிரிட் எலக்ட்ரிக் வாகனமாகும். இதன் விலை ரூ.10.48 லட்சம் முதல் ரூ.19.19 லட்சம் வரையிலான பல மாடல்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இ-டிரைவ் வித் எக்கோ நார்மல் மற்றும் ஸ்போர்ட் டிரைவ், இ.வி.மோட், 6 எஸ்.ஆர்.எஸ். ஏர் பேக்ஸ், கிளாஸ் லீடிங் ஃபியூயல் எக்கனாமி, 8 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர் வரையிலான ஹைபிரிட் பேட்டரி வாரன்டி. வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது என்றார்.