திருச்சி ஆவின் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவின் முன்னேற்ற சங்க செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது ஒய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி பலனை உடனடியாக வழங்க வேண்டும், இறந்த முன்னாள் பணியாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், இறந்த ஓய்வு பெற்ற பணியாளர்கள் வாரிசுக்கு குடுமப நிதி ரூபாய் 50,000 உடனே வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.