திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளியில் செயற்கை நுண்ணறிவியல், இயந்திரவியல் குருகுலம் முதல் குளோபல் புதுமை மற்றும் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட ஆர்டிஓ தவச்செல்வம் மற்றும் அறிவியல் அறிஞர் சங்கரன் நாராயண ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அருகில் பள்ளியின் செயலாளர் இரகுநந்தன், பள்ளியின் அட்வைசர் ஜெயந்தி ரவி பிரசன்ன பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் குழுவில் உள்ள மாணவர்கள் குருகுல காலத்தில் குரு தட்சனை யோகாசனம் குரு சீடர்களின் உறவு முறை குருவிற்கு அக்காலத்தில் அளித்த ராமாயணம் மகாபாரதம் காவியங்களில் காட்சிகள் மூலம் விளக்கினர். மேலும் ஆதிவாசிகளின் வாழ்வு முறை அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை முறை அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் கோவில்களின் அமைப்பு அவற்றின் கட்டுமான சிறப்புகள் இடைக்காலத்தில் உருவான அதிசய சின்னங்கள் நோய்களுக்கான மருந்துகள் காற்றாலையில் இருந்து மின்சாரம் தயாரித்தல் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளால் முதலிய மாதிரிகளை மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளால் செய்து காட்டி இருந்தனர்.
சோழர் கருவியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல் காற்றாலைகளின் செயல்பாடுகள் விவசாயத்தின் புதிய புதிய திட்டங்களின் பயன்பாடுகள் கோள்களின் சிறப்புகள் டிஜிட்டல் வகுப்பறைக்கு பயன்படும் கல்வி வளர்ச்சிக்கு தேவையான வீடியோக்களை மாணவர்கள் எப்படி உருவாக்கலாம் என்பதையும் கணிதத்தின் முக்கியத்துவமாக இருக்கும் புள்ளி விவரங்களின் படிநிலைகள் காற்று மாசுபாட்டின் புள்ளி விவரங்களை கணித மூலம் மேம்படுத்துதல் கணித சூத்திரங்களால் உருவாக்கப்பட்ட கடிகாரம் கோணங்களில் சூரிய ஒளியின் மூலம் எவ்வாறு கணக்கிடலாம் என்ற மாதிரிகளை மாணவர்கள் செய்து காட்டினர். ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ரோபோடிக் பயிற்சி மையத்தில் திறப்பு விழா நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக சிறப்பு முகமத் ஆஷிக் ரஹ்மான் திறந்து வைத்தார். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவியல் தொடர்பான சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் ருக்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.