மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம் பட்டியில் சமத்துவ ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு துவக்கமாக மாடுபிடி வீரர்கள் வரிசையாக நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து முதலாவதாக கோவில் ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர் மற்றும் மாட்டின் உரிமையாளர் பார்வையாளர் என மொத்தம் 23, காயம் ஏற்பட்டது இதில் 3, பேரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் மருதூர் கிராமத்தை சேர்ந்த சங்கிலி முத்து (32வயது) பார்வையாளர் இவருக்கு கை முறிவு, அதேபோல் ஈச்சம்பட்டியை சேர்ந்த ஆரிப் முகமது (25வயது) மாடு முட்டியதில் வலது கையில் காயம் ஏற்பட்டது. மேலும் மாட்டின் உரிமையாளர் கிஷோர் (19வயது) இவருக்கு வலது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் 300மாடு பிடி வீரர்கள் பங்கெடுத்தனர்