திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் 18ஆவது பட்டமளிப்பு விழாவானது கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி என்.ஐ.டி கல்லூரி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். ஆளுநர் குழு தலைவர் பாஸ்கர்பட் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பெடரல் வங்கியின் மேலாண் இயக்குனரும் முதன்மை செயல் அலுவலருமான சியாம் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது ஒருவரின் தோற்றம் முக்கியம் உள்ள லட்சியத்தால் மட்டுமே குறிக்கோள்களை அடைய முடியும் என்றும் வாழ்க்கையில் உறுதியுடன் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி பட்டதாரிகளை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து என் ஐ டி கல்லூரி இயக்குனர் அகிலா மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் முனைவர் பட்டம் 131 பேருக்கும், எம்.எஸ் 16 பேருக்கும்,எம்.டெக் 572பேருக்கும், எம்.ஆர்க் 21பேருக்கும், எம்.பி.ஏ 96பேருக்கும், எம்.சி.ஏ.110 பேருக்கும், எம்.எஸ்.சி 92பேருக்கும், எம்.ஏ. 20 பேருக்கும்,பி.டெக் 881பேருக்கும், பி.ஆர்க் 38 பேருக்கும் என மொத்தம் 1977 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இறுதியில் பட்டங்களைப் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.