முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கன்னியாக்குமரியில் திறந்து வைத்த 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு இவ்வாண்டு வெள்ளி விழா ஆண்டு .எனவே தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தை திருக்குறள் வார விழா மாதமாக வள்ளுவரை போற்றும் விழாவாக திருவள்ளுவரை திருக்குறளை கொண்டாடும் விழாவாக தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்டு வருகிறது.

அதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டம் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய “உலகாளும் வள்ளுவமே ” பாடலை மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். பாடலை இசைவாணன் என்கிற ஆகாஷ் பாடியுள்ளார். ஸ்டாரி இசையமைத்துள்ளார்.

பாடல் இணைப்பு காணொளியில் வெளியிடப்பட்டது கடந்த செப்டம்பர் மாதம் “பனங்காடையின் பாடல்கள் ” என்கின்ற மக்களிசை விழிப்புணர்வுப் பாடல் தொகுப்பை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அத்தொகுபில் உள்ள முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது .இப்பாடல் நுங்கு வண்டிக்காரன் வலையொளியில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்