திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் துவக்க விழா மற்றும் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு கலந்துகொண்டு புதிய சங்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் காந்திமதி சக்திவேல், ஞானேஸ்வரி பாலசுப்ரமணியன், கவிதா வெங்கடாசலம் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் திருச்சி மணிகண்டம் ஒன்றிய அனைத்து வியாபாரிகளின் நல சங்கத்தின் தீர்மானங்களாக சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, சங்க உறுப்பினர்கள் அனைவரையும் வணிகர் நல வாரியத்தில் இணைப்பது, சங்க உறுப்பினர்கள் உணவு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் ஃபுட் லைசென்ஸ் பெற்று தருவது, சங்க உறுப்பினர் இயற்கை எய்தினால் உதவித்தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்குவது, அதேபோல் நலிந்த சங்க உறுப்பினர்களுக்கு வங்கி மூலம் கடன் வசதி பெற்று தருவது, சங்க உறுப்பினர்கள் கடையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கும் திருட்டு சம்பவங்களுக்கு தீர்வு காணும் விதமாக சிசிடிவி கேமரா பொருத்துவதும் மேலும் காவல்துறை மூலமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதும்,
சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி மூலம் அடையாள அட்டை பெற்று தரவும், பல கோடி அரசு பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட் திறப்பு விழா கண்டும் பூட்டிய உள்ளது அதை துறை சார்ந்த அமைச்சர் மூலமாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மூலமாகவும் நமது பகுதியை சார்ந்த மக்களுக்கு பயன்பெறும் வகையில் ,மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சங்க மூலம் முயற்சி மேற்கோள்ளபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் திருச்சி மணிகண்டன் பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் பொருளாளர் அசாருதீன் நன்றியுரை ஆற்றினார்.