திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜவகர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசுவின் ஆதரவாளரான மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.

 இந்நிலையில் திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றத்தை கண்டித்து, திருச்சி காங்கிரஸ் அருணாச்சலம் மன்றத்தில் ஜவகர் ஆதரவாளர்களான காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பூட்டு போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் புத்தூர் சார்லஸ் முன்னாள் கோட்ட மாவட்ட தலைவர்கள் கள்ளத்தெரு குமார், அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, கலைசெல்வி, அண்ணா சிலை விக்டர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *