உலக இதய தின அனுசரிப்பு நாளை கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கான மின் உடலியங்கியல் பிரிவை திருச்சி காவேரி மருத்துவமனை நேற்று தொடங்கியது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இடையீட்டு இதயவியல் மற்றும் மின் உடலியங்கியல் சிகிச்சை நிபுணர் ஜோசப் கூறுகையில்:- இந்த ஒரு புதிவிதமான நோய், பொதுவாக 3கிலோகிராம் எடையுள்ள குழந்தைகளில் இருந்து 13 கிலோ எடை உள்ள குழந்தைகள் வரையும், உள்ள குழந்தைகளுக்கு இப்பிரச்சனை ஏற்படும். அதிலும் குழந்தைகளால் ஒருசில அதிக டெசிபில் உள்ள சத்தங்கள் கேட்டால் அவர்களுடைய இதய துடிப்பில் மாற்றம் ஏற்பட்டு ஒருசில விநாடிகளில் அவர் மயக்கமடைந்து விழுவார்கள். பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு அவர்களாகவே மீண்டும் எழுந்து இயல்பாக நடந்து கொள்வார்கள்.

இது இருதயத்தில் உள்ள குறைபாடு இதயத்தில் மின் தூண்டல்களில் உள்ள இயக்க குறைபாடு , இதய துடிப்பு சீராக இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் இது நடைபெறுகிறது. எனவே முதல்முறையாக காவேரி ஹார்ட் சிட்டியில் குழந்தைகளுக்கான மின் உடலியங்கியல் குழந்தைகளுக்கான உறுப்பு நீக்கங்கள், குழந்தைகளுக்கான பேஸ்மேக்கர்கள், மரபியல் ரீதியாக குழந்தைகளுக்கு வரும் ஒழுங்கற்ற இதயத்துடிப்புக்கு சிகிச்சை, கன்டக்ஷன் சாதனங்கள் மற்றும் மைக்ரோ பேஸ்மேக்கர்கள், தோலுக்கு அடியில், வளரும் கருவில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு இருப்புபாதை அடையாளம் காணல் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. இதில் குழந்தை இதய நோய் நிபுணர் மணிராம்கிருஷ்ணாவின் பங்களிப்பும் அதிகம் உள்ளது என்றார்.

இதய அறுவைசிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் செந்தில்குமார் பேசகையில்:- இந்த வாரம் முழுவதும் உலக இதய தினத்தின் கருப்பொருள், இதயத்தை பயன்படுத்துங்கள், இதயத்தை அறிந்திடுங்கள் என்ற தலைப்பின்கீழ் அனுசரிக்கப்படுகிறது. எனவே இந்த வாரம் முழுவதும் நோயாளிகளுக்கு இலவச கலந்தாலோசனைகள், பொதுவெளி நாடகளம், பிரத்தியேக இதய சுகாதார பரிசோதனைகள் மற்றும் மானிய விலையிலும், இலவச ஆலோசனைகள், உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் (இயக்கவியல்) ஆன்ரூ நித்தியதாஸ், பொது மேலாளர் மாதவன், உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *