திருச்சி ஓடத்துறை காவிரி பாலம் பகுதியில், காவிரியின் குறுக்கே 106கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமானபணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறையாக குடியிருந்துவரும் 45 குடும்பங்களை அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வற்புறுத்தி வீடுகளில் மின்இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டித்ததால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சட்டமன்ற உறுப்பினரால் பட்டா வழங்கப்பட்டு 9மாதங்கள் ஆகியும் தற்போது அந்த இடத்தை அளந்துகொடுக்காத நிலையில், அதிகாரிகளால் தற்போது வசிக்கும் இடத்தை காலிசெய்துவிட மிரட்டல் விடுக்கப்பட்டதால், பொதுமக்கள் என்னசெய்வதென்று தெரியாத பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கவுன்சிலர்கூட நேரில்வந்து விவரங்கள் கேட்கவில்லை, ஓட்டு கேட்பதற்கு மட்டும் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை வந்து செல்கிறார்கள் ஆனால் இங்குள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்துகொடுக்க முன்வரவில்லை, இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம் எல் ஏ இனிக்கோ இருதயராஜை தற்போது வரை எங்களை வந்து சந்திக்காமல் எங்கள் கோரிக்கையை செவிசாய்க்காமல் இருந்து வருகிறார் என கூறி திருச்சி காவேரி பாலத்தில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் காவிரி பாலத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் போது வாலிபர் ஒருவர் திடீரென உடலில் மன்னனை ஊற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
