திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ குங்கும வல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 74 ஆம் ஆண்டு வளையல் காப்பு திருவிழா 2ம் தேதி இன்று துவங்கியது. காலையில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி சிறப்பு ஹோம் பூஜை தொடங்கியது மேலும் மாலை வளைகாப்பு சம்பிரதைய பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று குங்கும வள்ளிக்கு அர்ச்சிக்கப்பட்ட வளையல் குங்குமம் அம்பாள் படம் பிரசாதம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாளை 3ம் தேதி குழந்தை பாக்கியம் வேண்டியும் பூஜைகள் ஆரம்பமாகி நடைபெறுகிறது மேலும் 4 ஆம் தேதி திருமண தடை நீங்கவும் மாங்கல்ய பாக்கியம் ஏற்பட வேண்டி சிறப்பு ஓம பூஜைகள் நடைபெற உள்ளது நிகழ்ச்சியின் இறுதியாக திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும் பெண்கள் மாங்கல்ய பாக்கியத்துடன் இருக்கவும்
48 நாள் அர்ச்சிக்கப்பட்ட வளையல் குங்குமம் அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த குங்குமவல்லி அம்மனை கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தானிகர் ஹரிஹர குருக்கள் செய்திருந்தார்