தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் பூச்சொறிதல் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா மார்ச். 9ம் தேதி தொடங்குகிறது .. இதனிடையே பூச்சொரிதல் விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்வர்.
இந்நிலையில் இந்த பூச்சொரிதல் விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சமயபுரம் நான்கு ரோடு, கடைவீதி,தேரோடும் வீதி, கோயில் பகுதிகளில் 160 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு பக்தர்கள் பாதுகாப்பிற்காக 1600 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது லால்குடி டி.எஸ்.பி. தினேஷ் குமார் மற்றும் காவல் அலுவலர்கள் உடனிருந்தனர்.