திருச்சி மாவட்டம், குண்டூர், பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவரது மகன் பாலலோகேஷ் இவர் திருச்சி உறையூர் நெசவாளர் காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மகன் வசந்தகுமார் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளரும், அவரது சகோதரரான கமலேஷ் பேசுகையில்:-கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக கராத்தே முத்துக்குமார் என்ற வழக்கறிஞரின் அலுவலகத்தில் எனது அண்ணன் பாலலோகேஷ் பணிபுரியும் போது திருச்சி எம்பி சிவா, மற்றும் அவரது மருமகன் வழக்கறிஞர் முத்துக்குமாரின் உதவியாளருமானா வசந்தகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கார்களை கொண்டு வந்து அடகு வைத்தார். ஒரு வருட காலமாக இதுபோல் கார்களை அடகு வைத்து மீண்டும் அதை திருப்பிக் கொள்ளும் செயலில் ஈடுபட்டு வந்தார். இதேபோல் 27கார் நாங்கள் பெற்றிருந்தோம். இந்நிலையில் கார் கொண்டு வந்து அடகு வைத்து சென்ற வசந்தகுமார் திடீரென்று தலைமறைவானார். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு காரை நாங்கள் வழக்கு தொடர்பாக ஒப்படைத்திருந்தோம். அப்போது எங்களது சம்மதம் இன்றி யாரோ இரண்டு நபர் வந்து அது தங்களது கார் என கூறியதால் அவர்களிடத்தில் காரை கொடுத்து விட்டோம் என திருவெரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் எங்களிடம் தெரிவிக்கிறார். எங்களிடம் எந்தவித விசாரணை இன்றி அந்த காரை கொடுத்துள்ளார் அவர்கள் அந்த காரை தவறான வழியில் பயன்படுத்தியிருந்தால் அந்த வழக்கு எங்கள் மேல்தான் வரும். வசந்தகுமார் என்பவர் இதே போல் திருச்சி எம்பி. சிவாவின் மகளிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று இருக்கிறார். இது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.

இதனிடையே வசந்தகுமார் தலைமறையாவதற்கு முன்பு எங்களிடம் அடகு வைத்த 25 கார்களில் 11 கார்களை சர்வீஸ் செய்ய வேண்டும் எனக் கூறி எடுத்துச் சென்று கார்களை வாடகைக்கு விட்டுள்ளார். தொடர்ந்து அந்த பதினோரு கார்களையும் இன்னொருவர் இடத்தில் அடகு வைத்துள்ளார். இந்நிலையில் எங்களிடமிருந்த 13 கார்களை ஹோண்டா கார் விற்பனை நிறுவனத்தில இருந்து ஜான் என்ற நபர் வழக்கறிஞருடன் வந்து இரவோடு இரவாக மாற்றுச் சாவி கொண்டு எந்தவித அனுமதியும் இல்லாமல் அந்த கார்களை கொண்டு சென்றுள்ளனர். இதுவரை சுமார் 94லட்சம் ரூபாய் இழந்துள்ளோம். வசந்தகுமாருக்கு நாங்கள் G.Pay மூலமாகவும், வங்கி மூலமாவும் பணத்தை கொடுத்துள்ளோம். அதற்கான அனைத்து ஆதாரமும் எங்களிடம் உள்ளது. எனவே வசந்தகுமார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்ததாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *