திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் உள் தர மதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்திலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக அக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தினை இணையவழியில் தாங்களாகவே கற்பதற்கு ஏதுவாக ஜோஸ் டெல் என்கிற கற்றல் மேலாண்மை தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோஸ் டெல் கற்றல் மேலாண்மை தளத்தினை மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்று கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் துவங்கி வைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் உயர்கல்வியில் கற்றல் மேலாண்மை தளத்தின் பங்கு குறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையத்தின் இயக்குனர் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாகிகள் அதிபர் லியோனார்ட் பெர்னான்டோ, செயலர் பீட்டர், துணை முதல்வர்கள் புலத்தலைவர்கள், துறை தலைவர்கள் , அனைத்து துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன் நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழு தலைவர் ரோஸ் வெனிஸ் மற்றும் இணை தலைவர் குர்ஷித் பேகம் ஆகியோர் செய்திருந்தனர்.