திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் சகோதர சங்கங்களின் சார்பில் முப்பெரும் விழா திருச்சி நடுகுஜிலி தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். செயலாளர் BJ.ஹரிநாத் வரவேற்புரையாற்றினார். மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் கலைமாமணி தேவநாத இராமானுஜ தாஸர் மற்றும் வீர ராகவன் ஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்களை வழக்கறிஞர் S.சுதர்சன் வழங்கினார். 100 மாணவர்களுக்கு 1 லட்சம் கல்வி ஊக்கபரிசுகளை அங்கியா AT சம்வித்யா தேவி அறக்கட்டளை நிர்வாகி துளசிராமன், ரமேஷ்பாபு குடும்பத்தினர்கள் வழங்கினர். மேலும் திருச்சி மாவட்டத்தில் SSLC, +2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற 23 மாணவ, மாணவிகளுக்கு நினைவுகேடயம் மற்றும் ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி BJ.ஹரிநாத் வெளியீடு செய்ய உள்ள “பெருமைமிகு சௌராஷ்ட்ரர்கள்” புத்தகத்தின் நூல் அட்டை அறிமுகம் செய்யப்பட்டது.
விழாவில் நன்கொடையாளர்கள் அனைவரும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப் பட்டார்கள். மேலும் இந்நிகழ்வில் சபை தலைவர் ஜெனார்த்தனன், கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், முன்னாள் விஞ்ஞானி சகஸ்ரநாமன், கோவில் தலைவர் கோவிந்தன், ஆலோசகர்கள் சசிகுமார், வினோத்பாபு மற்றும் சங்க நிர்வாகிகள் யுவராஜ், ஜெய்கணேஷ், ரவிசங்கர், வினோத், ஹரிஹரன், ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் BC வெங்கடேஷ் செய்திருந்தார். இறுதியாக பொருளாளர் அம்சராம் நன்றியுரை வழங்கினார்.