திருச்சியில் முதல் முறையாக சிறுநீரக அறுவை சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக குறைந்த ஊடுருவலுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் புதிய பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதியை அளிக்கக்கூடிய அதிநவீன சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யும் 100 வாட் ஹோல்மியம் லேசர் கருவியை ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை முதன் முறையாக இன்று அறிமுகப்படுத்தியது.

இந்த நவீன அதிக சக்தி கொண்ட லேசர் தொழில்நுட்பம் சிறுநீரகக் கற்கள், சிறுநீர் பாதை கற்கள் மற்றும் பிராஸ்டேட் வீக்கத்திற்கான சிகிச்சைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த லேசர் தொழில்நுட்பம் மிகத் துல்லியம் மற்றும் வேகமாக செய்யக்கூடிய அறுவை சிகிச்சை ஆகும். இது நோயாளிகளுக்கு மிகவும் பாதுகாப்பானது குறைந்த திசு பாதிப்புடன் கற்களை திறம்பட உடைக்கும் திறன் கொண்டதால் நோயாளிகள் குறைந்த நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவும் விரைவான மீட்பையும் பெறுகின்றனர்.

பி பி ஹெச் சிகிச்சையில் ஒரு புரட்சிகர முன்னேற்றமாக இம்முறை ரத்தமில்லாமல் காயம் இல்லாமல் சிகிச்சை வழங்க உதவுகிறது. இது மிகப்பெரிய ப்ராஸ்டேட் கட்டிகளையும் எளிதில் குணமாக்கும் திறன் கொண்டது இதனால் நோயாளிகள் விரைவாக குணமடைந்து குறைந்த காலத்தில் வீட்டிற்கு திரும்ப உதவுகிறது இந்த சிகிச்சைக்கு அரசு காப்பீடு திட்டம் கிடையாது. திருச்சியில் முதல் முறையாக ஜி.வி.என் மருத்துவமனையில் இந்த கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்