திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் கிறிஸ்தவ அமைப்புகள் தான் பள்ளிகள் அமைத்து படிக்க வைத்தார்கள் இப்போது அதற்கு அச்சுறுத்தல் வந்துள்ளது தற்போதுள்ள கல்வி முறையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது மோடி கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பெற்றோர்கள் பார்க்கின்ற குலத் தொழிலுக்கு செல்ல வேண்டும் அடிமைப் பணிக்காக சாமானிய வீட்டு பிள்ளைகளை அனுப்ப கங்கணம் கட்டிக்கொண்டு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர்
இந்தியாவை தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் தவிர அனைத்து மாநிலங்களிலும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டு முதல்வரை அடி பணிய வைத்து விடலாம் என இதில் கையெழுத்து இட்டால் தான் அனைவருக்கு கல்வி நிதி வழங்கப்படும் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் 9 வயது பிள்ளைகளை அடிமை வேலைகளுக்கு அனுப்பும் உங்கள் திட்டம் நான் இருக்கும் வரை நடக்காது 2000 கோடி என்ன 10000 கோடி தர மறுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என உறுதியா உள்ள முதல்வருக்கு உங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். நமது கல்வி கொள்கை தான் உலகம் முழுவதும் மாணவர்கள் தலைசிறந்த இடங்களில் பணியாற்ற காரணம். அது எளிதாக கிடைக்கவில்லை. திராவிட கழகம் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இந்தியை விரட்டிய பிறகுதான் இந்த உச்சத்திற்கு வந்துள்ளோம். தமிழ் மொழியை சாதாரணமாக எண்ண வேண்டாம். அதை பேசுவதை மிக சாதாரணமாக நினைக்க வேண்டாம். மூத்த மொழிகளில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி நம் தமிழ் மொழி தான் . தமிழ் மொழியிலிருந்து தான் மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகள் தோன்றியதாக கார்டுவெல் தெரிவித்துள்ளார். தமிழை, தமிழ் கலாச்சாரத்தை, சமூக நீதியை அழித்து விட்டால் நாம் காலூன்றி விடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
தெரிந்து கொள்ளுங்கள் *ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மிகப்பெரிய கொடூரமான சித்தாந்தம்*. சனாதான தர்மம் சாதிய வன்மம் கொண்டவர்கள். அதனால் தான் அதை எதிர்க்கிறோம். எல்லா கோயில்களிலும் எல்லா மதத்தினரும் வழிபடலாம் என்று பாதுகாப்பு தரும் அரசு தமிழக அரசு. சிறுபான்மையினர் நடத்துகின்ற பள்ளி கல்லூரிகளுக்கு பாதுகாப்பு வழங்குபவராக தமிழக முதல்வர் இருக்கிறார் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்… GST கவுன்சில் மீட்டிங் இன்று தொடங்கி உள்ளது அது தொடர்பான கேள்விக்கு? வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கஷ்டப்படுத்தாமல் தமிழ் நாட்டுக்கு நிதி பகிர்வு அதிகமாக தாருங்கள் என கேளுங்கள் என்றார் மேலும் தமிழ்நாட்டிற்கு GST கிடைக்காமல் இருக்க GST-ல் மாற்றம் கொண்டுவருதாக சிலர் கூறுகின்றனர் எனக்கு அதை பற்றி தெரியவில்லை இதை நீங்கள் நிர்மலா சீதாராமனிடம் கேளுங்கள் தமிழ்நாட்டிற்கு கொஞ்சம் பணம் தர சொல்லுங்கள் என்றார் ஆசிரியர் tet தீர்ப்பு குறித்த கேள்விக்கு? தமிழக முதலமைச்சர் நல்ல முடிவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறி உள்ளார் ஆசிரியர்களுக்கு இந்த அரசாங்கம் எந்த இடையூறும் செய்யாது முடிந்தால் உதவி செய்யும் என்றார்