திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனி பகுதியில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன் என்கிற விவேக் தமிழன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் செங்குளம் காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார் உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது விவேக் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை ரோடு பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மறைந்த விவேக் அவர்களின் தாயார் மற்றும் உறவினர்களுக்கு “தமிழ் முழக்கம்” மற்றும் திருச்சி மாவட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.