திருச்சி மாநகர திமுக மேற்கு மற்றும் மத்திய மாவட்டம் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் மேயருமான அன்பழகன் தலைமை தாங்கினார். தில்லை நகர் பகுதி செயலாளர் நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். நிர்வாகிகள் மணி பாலமுருகன் கலைச்செல்வி பிரேம்குமார் சுரேஷ் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பொன் முத்துராமலிங்கம் தலைமைக் கழக பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் செவ்ந்துலிங்கம் கிராப்பட்டி செல்வம் கருணாநிதி விமலாநாதன் மற்றும் அண்ணாநகர் மகளிர் அணி பகுதி அமைப்பாளர் யாஸ்மின் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்