திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் பிறந்த நாளையொட்டி 24 -வது மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் அன்னதானத்தை வழங்கினார்.
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் பேசுகையில்:-
6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி வருபவர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு. திருச்சியில் கடந்த 11 ஆண்டுகளாக அரிஸ்டோ மேம்பாலத்தின் இறுதி கட்ட பணி முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. இதற்கு ராணுவ இடம் கிடைக்காதது தான் காரணம். இதற்காக ராணுவ இடத்தை மத்திய அரசிடம் தொடர்ந்து போராடி பெற்றுக் தந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி முடக்கம் காரணமாக பொது மக்களுக்கு நல்லது செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி திருச்சி மாநகராட்சி 24-வது வார்டுக்கு 25 லட்சம் ரூபாய் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதாக திருநாவுக்கரசர் எம்.பி உறுதி அளித்துள்ளார். என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, தனசேகர், மாவட்ட துணைத் தலைவர் முரளி, மாவட்ட பொதுச் செயலாளர் டி.கே சுப்பையா, 24 வது கட்சி வார்டு தலைவர் எம்.ரவி, 18 வது வார்டு தலைவர் மலர் வெங்கடேஷ், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, பிரியங்கா பட்டேல் , மலைக்கோட்டை வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.