வக்பு வாரியத்தின் கீழ் ஏராளமான தர்காக்கள் உள்ளன. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் அந்தந்த பகுதியில் தலைமை அறங்காவலர் மற்றும் செயல் அறங்காவலர்கள் குழு மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் ஆங்காவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இதில் முகமதுகெளஸ் என்பவர் தலைமை அறங்காவலராக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் இன்று வாரியத்தின் உறுப்பினர்களான மணப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல்சமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மற்றும் நசீர்அகமது கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தர்காவின் செயல்பாடுகளை குறித்தும் அறங்காவலர் குழுவினரிடம் கேட்டு அறிந்தனர்.
பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த திருச்சி வக்பு வாரிய தலைமை அறங்காவலர் அல்லாபக்ஷ் என்கின்ற முகமதுகெளஸ் கூறுகையில்:- வக்பு வாரிய உறுப்பினர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் ஆய்வு மேற்கொள்ள இன்று திருச்சியில் பல்வேறு தர்காக்களை சென்று விட்டு நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு ஆய்வுக்கு வருகை தந்தனர். தமிழக அரசு ரூபாய் ஆறு கோடி பள்ளிவாசல்களுக்கும் தர்காக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் பழமையான தர்காவில் ஒன்றான நத்தர்வலி தர்காவுக்கும் புனரமைப்பு பணிக்காக ரூபாய் 50லட்சத்திலிருந்து 60லட்சம் வரை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அது தொடர்பான ஆய்வுகளும், செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தனர். அவர்களிடம் எங்கள் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தோம்.
பொதுவாக எல்லா இடங்களில் குற்றச்சாட்டுகள் இருக்கத்தான் செய்யும்.ஒரு காரியத்தைச் செய்யும்போது எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. பிடிக்காதவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழகத்தில் எல்லா வக்பு நிறுவனங்களிலும் குறை செல்ல ஓரிருவர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். அப்படி சொல்லும் குறைகளை நாங்கள் நிவர்த்தி செய்கிறோம். 11 வருடமாக கணக்கு காண்பிக்காமல் இருந்தது.அதனை முழுவதுமாக எடுத்து எங்களது ஒன்றை வருடம் சேர்த்து தணிக்கை செய்து கணக்குகளை ஒப்படைத்துள்ளோம் மேலும் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என தெரிவித்தார்.