திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் கன்டோன்மென்ட் ஹீபர் ரோடு பகுதியில் அமைந்துள்ளது. தினமும் பல நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் வழக்காடிகள் வந்து செல்லும் இடம். நீதிமன்றம் எதிரே பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்காவிற்கு முன்புறமும் பின்புறமும் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. பேருந்தில் இறங்கி நீதிமன்றமோ அல்லது வேறு பகுதிக்கோ செல்ல வேண்டிய நபர்கள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிப்படைந்து அதிக விபத்துகளும் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. மாவட்ட நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்காவை சுற்றி பேருந்து நிறுத்தம் அமைந்துள்ள இடத்திலிருந்து நீதிமன்றத்திற்கு உள்ளே செல்லும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் சாலைகளை கடந்து செல்ல ஏதுவாக வெள்ளை கோட்டுடன் கூடிய நடைபாதை மற்றும் அதில் இரவு நேரத்திலும் மிளிரக் கூடிய ஃபிளிக்கரிங் ஸ்டிக்கர்ஸ் அமைத்து தர

திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சிருஷ்டி சிங் (தெற்கு) அவர்களிடம் ஆம் ஆத்மீ மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் இளங்கோ மனு கொடுத்துள்ளார். தற்போதையl போக்குவரத்து மிகுந்த சூழ்நிலையில் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களாலும் பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று எனவும் வழக்கறிஞர் தெரிவித்தார். காவல் துணை ஆணையர் சிருஷ்டி சிங் அவர்களும் இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழுவிற்கு மற்றும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறைக்கும் அனுப்பி உரிய துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள். நடைபாதை கோர்ட்டுடன் அமைத்துக் கொடுக்கப்பட்டால் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் மிகுந்த பயனடையவர்கள் எனவும் வழக்கறிஞர் இளங்கோ அவர்கள் காவல் துணை ஆணையர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
