திருச்சி பஞ்சபூர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் ரூபாய் 17.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தனியார் சொகுசு பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்து பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் சரவணன், போலீஸ் கமிஷனர் காமினி மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- வணிக வளாகம் கட்டுமான பணிகள், மார்கெட் உள்ளிட்டவற்றை விரைந்து முடித்து முதலமைச்சரிடம் நேரம் வாங்கி முதல்வர் அதை திறந்து வைப்பார். செங்கிப்படியில் நடக்கும் மகளிர் மாநாட்டிற்கு 1.25 லட்சம் பேர் வருவார்கள் அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இன்பதுரை வழக்கறிஞர் அதனால் என் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி தரவில்லை.

அனைத்து புகார்களையும் கொடுத்த அனுமதி கேட்டு ஆளுநரிடம் கொடுத்தோம் அதற்கு அவர் ஒப்புதல் தரவில்லை. தந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். கடந்த தேர்தலிலும் பா.ம.க தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருந்தார்கள் அப்போதே நாங்கள் வெற்றி பெற்றோம். ராமதாஸ் எங்களுடன் கூட்டணிக்கு வருவாரா என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் பி.எஸ்.என்.எல் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து முன்பதி மையம் திருச்சி மாநகர பகுதியில் திறப்பதற்கு யோசனை செய்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்