திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் பழைய மதுரை ரோடு பகுதியில் புதிதாக மொத்த காய்கறி சந்தை வணிக வளாகம் கட்டும் பணி மேற்கொள்வதற்கு விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டு 236 கோடி மதிப்பீட்டில், 3.70 ஏக்கர் பரப்பளவு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டப்பணிகள் தொடர்பாக வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வியாபாரிகளின் கருத்துக்களை தெரிவிக்கும் விதமாக நடைபெற்றது.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள் பேசும் போது 140 வருடங்களாக ஒரே இடத்தில் இருந்து வரும் காந்தி மார்க்கெட் மாற்ற வேண்டாம். சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். காந்தி மார்க்கெட் பகுதி மட்டும் தான் பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் எனவே காந்தி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம் என வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் தரப்பில் தலைவர் பாபு கூறுகையில்.., திருச்சி காந்தி மார்க்கெட் இருக்கும் இடத்தை சுற்றியுள்ள வியாபாரிகள் வணிகர்களால் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை அதனை சுற்றியுள்ள கடைகளால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அதனை சரி செய்தாலே போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. எனவே திருச்சி காந்தி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் அதனையும் மீறி காந்தி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற முற்பட்டால் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் உள்ளிட்டவைகளில் வியாபாரிகள் அனைவரும் தமிழகம் முழுவதும் ஈடுபடுவோம் என தெரிவித்தார்