திருச்சி அரியமங்கலம் அருகிலுள்ள பழைய பால் பண்ணை பேருந்து நிறுத்தம் இடத்தில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் முறையாக நிறுத்துவது கிடையாது மேலும் தனியார் பேருந்துகள் அதிகப்படியான பயணிகளை ஏற்றுவதற்காக ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு சாலை மறைத்து நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பொது மக்களும் பால் பண்ணையை கடந்து செல்வதற்கு 20 நிமிடங்களுக்கும் மேலாகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பஸ் ஸ்டாப்பில் நிற்காததால் பஸ் ஸ்டாப்பில் சில சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
எனவே இது போன்ற இடையூறுகளை கலைவதற்கு அப்பகுதியில் கூடுதலான போக்குவரத்து காவல்துறையினரை பணியமர்த்தி போக்குவரத்தை சீர் செய்யும் படி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் ரமணா இன்று கோரிக்கை மனு அளித்தார். அருகில் சமூக ஆர்வலர் காமராஜர், மக்கள் உரிமை கூட்டணி நிர்வாகி ஆகியோர் உடன் இருந்தனர்.