திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது இந்த விழாவிற்கு வருகை புரிந்த தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தேர்ச்சி பெற்ற 106232 பேருக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அருகில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் கார்த்திகேயன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு :
சங்க காலத்தில் பெண் புலவர்கள் அதிக அளவு இருந்தனர் – கலாச்சார படையெடுப்பிற்குப் பின் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக்கூறி பெண்களின் கல்வியை தடுத்துவிட்டனர். தற்பொழுது மீண்டும் பெண்கள் அதிக அளவில் படிக்க தொடங்கியுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து பட்டம் பெறுகின்றனர். சங்க காலம் மீண்டும் திரும்புகிறது.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் நடைமுறையில் உள்ளது – மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்று கொள்ளலாம், ஆனால் மூன்றாவது மொழி கற்க கட்டாயப்படுத்த கூடாது. ((இருமொழி கொள்கைக்கு ஆதரவு தருமாறு ஆளுநரிடம் மேடையிலேயே கோரிக்கை வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி)) இண்டர்நேஷனல் ஆங்கிலமும், உள்ளூர் மொழியும் என இருமொழி இருக்க வேண்டும்,
மூன்றாவது மொழியாக தெலுங்கு, கன்னடம் ஏதாவது ஒரு மொழி படிக்கலாம் ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது.
பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு:
37 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவதில் நான் பெருமை கொள்கிறேன். நாட்டில் உள்ள புனிதமான நதிகளில் காவிரி ஆறும் ஒன்று. ஸ்ரீரங்கம் கோவில் மிகவும் பழமையான சிறப்பு வாய்ந்த கோவில் – ஒவ்வொரு இந்தியர்களுக்கும் புண்ணியத் ஸ்தலமான ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டும் என்கிற ஆவல் இருக்கும்.
கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியில் திருச்சி முக்கியமான இடமாக திகழ்ந்து வருகிறது.