திருச்சி வயலூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிப்பு அறிவியல் துறை சார்பில் 2-ம் மற்றும் 3-ம் தேதி ஆகிய இரண்டு நாள் சர்வதேச மாநாடு இன்று தொடங்கியது ஒரு வணிகத்தின் வரவு செலவுகளை கணிப்பது கணிப்பு அறிவியல் ஆகும் ஆசிய கண்டத்திலேயே கணிப்பு அறிவியலில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முதன் முதலில் பிஷப் ஹீபர் கல்லூரியில் தான் தொடங்கப்பட்டது
கல்லூரி முதல்வர் பால் தயாபரன் மற்றும் துரை தலைவர் ஹேப்ஷிபா பியூலா தலைமையில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு நடைப் பெறுகின்றது இதற்க்கு இன்ஸ்டிட் ஆஃப் ஆக்சுரிஸ் ஆஃப் இந்தியா அருணாச்சலம் துணை முதல்வர் அழகப்பா மோசஸ், ஆக்சுரியல் அண்டர் ரைட்டர் ,ஆக்கோ ஜெனரல் இன்ஸ்சுரன்ஸ் ரிடிகா அகர்வால், பேயஸ் பிஸ்னஸ் ஸ்குள் , ஸ்காட்லாந் பேராசிரியர் ஐயன் ஆலன்,
சென்னை இன்ஸ்சுரன்ஸ் ஓம்பட்ஸ்மேன் பிராபாகரன், கண்ஸல்டிங் ஆக்சுரி கார்த்திகே கோட்டார், மும்பை காலேஜ் ஆஃப் இன்ஸ்சுரன்ஸ் கிருஷ்ண மோகன், ஸ்டேக் ஹொல்டர் மேனேஜர் சுங்கு பானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் . கணிப்பு துறையில் இன்று இன்சுரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, தான் பௌன்டேஷன் (மதுரை),இளங்கனல் டிரஸ்ட் (திருச்சி) ஆகியோருடன் சேர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
இந்த கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாது பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று 150 ற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர் . அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் நடனம் பாட்டு இசை மற்றும் தனிமைகளை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.