யூத் ரெட் கிராஸ் மற்றும் மனநலம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு மையம், பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சி திட்டம் குறித்த ஆலோசனை மற்றும் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பிற்கு இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் டாக்டர் கிப்ட்சன் வரவேற்புரை ஆற்றினார். பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பிரின்சி மெர்லின் தலைமை உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக 5வது டான் பிளாக் பெல்ட் & தேசிய தங்கப் பதக்கம் கராத்தே & தற்காப்பு பயிற்றுவிப்பாளர், பிரவீனா கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்த தற்காப்பு கலைகள் குறித்தும் அதை எப்படி கையாள்வது என்பது குறித்தும் ஆரோக்கியமான மனநிலை மற்றும் தன்னம்பிக்கை குறித்து எடுத்துரைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரிடாக்டர்.வி.ஆனந்த் கிதியோன் பேராசிரியர்கள் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக ஒருங்கிணைப்பாளர் ரீனா ரெபெல்லோ நன்றியுரை ஆற்றினார்.