தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் திருச்சி புங்கனூர் கீழத் தெருவை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவர் கோரிக்கை மனுக்களை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணனிடம் புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது பாட்டனார் சின்னையன் பெயரில் தாயனூர் வருவாய் கிராமம் புங்கனூரில் விவசாய நிலம் உள்ளது.இது எங்களுடைய குடும்ப சொத்து அந்த நிலத்தை வருவாய் ஆணையர் என்னுடைய கருத்தை கேட்காமல் வேறு ஒருவரது பெயருக்கு 10 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் செய்துள்ளார். அதனை ரத்து செய்து என் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த பட்டா மாறுதலில் குளறுபடி செய்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 5-பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனு அளித்த போது வயலூர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.
