திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.முக. செயலாளர் குமார் தலைமையில் .வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, கழக அமைப்பு செயலாளர் ரத்னவேல், முன்னாள் அமைச்சர் என். ஆர்.சிவபதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி,மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர்கள் சீனிவாசன், செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து மனு அளித்தனர்.

பின்னர் குமார், பரஞ்சோதி, ரத்தினவேல் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-

திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஓ பன்னீர்செல்வம் சார்பில் வருகின்ற 24 ம் தேதி நடத்த இருக்கும் கூட்டத்தில் அதிமுக கொடிகளையும், கட்சி சின்னத்தையும், லெட்டர் பேடையும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமியை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பன்னீர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த பொதுக்குழு தீர்மானங்களை நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் அதிமுகவிற்கு தொடர்பு இல்லாத இவர்கள் அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. அதனை அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதில் பன்னீர்செல்வம் தரப்பினர்பொது மக்களையும் அதிமுகவினரையும் குழப்பும் வகையிலும், அரசியல் செய்ய இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் இங்கே தட்டனைச் சட்டம்அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.இந்திய தண்டனைச் சட்டம் 1860 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 2000 ஆகியவற்றின்படி வழக்குப்பதிந்து இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும. அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொடியினை மாற்றி அதில் அண்ணாவின் கையில் இரட்டை இலை இடம்பெற செய்திருப்பதாக சொல்கிறீர்கள். அந்த இரட்டை இலையும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது. காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை இடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்