திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் வயலூர் ரோடு சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அமைப்பு செயலாளர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வர் ஆக்க வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என கூறினார். இந்த கூட்டத்தில் இளைஞர் அணி சிவபதி அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல் வளர்மதி மனோகரன் இளைஞர் அணி துணை செயலாளர் செல்வராஜ் சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான் மீனவர் அணி கண்ணதாசன் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்