நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் 2024 க்கான தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் திருச்சி சிறுகனூரில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் ,ரகுபதி ,கே என் நேரு ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சட்டமன்ற உறுப்பினர்கள் ,திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் சிவா ,மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சி பாராளுமன்ற வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ ,பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளராக அருண் நேருவையும் அறிமுகப்படுத்தினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில் :- பிரதமரிடம் நிதி ஏன் கொடுக்கவில்லை – தமிழகத்திற்கு என்ன செய்து இருக்கிறீர்கள் என்று கேட்டால் … எதற்கும் சரியான பதில் இல்லை. அவர் தோல்விகளை மறைக்க – மாநில உரிமைகளை பரிக்க பிரதமர் தேவையில்லாத விஷயங்களை பேசி திசை திருப்புகிறார்கள். 350 கோடி மதீப்பீட்டில் பேரூந்து முனையம் – 110 கோடியில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் – புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆத்தூர் முதல் பெரம்பலூர் வரை அகல ரயில் பாதை உருவாக்கப்படும். திருச்சி பால்பன்னை சாலையில் உயர்மட்ட சாலை அமைப்பதோடு – அலகு சாலையும் அமைக்கப்படும். பா.ஜ.க ஊழலை நாம் அல்ல நாடு முழுவதும் கூறும் :தேர்தல் பத்திர ஊழல் மிக பெரிய ஊழல் – நம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் ஊழல்.

8 ஆயிரம் கோடி ரூபாய் வரை பா.ஜ.க வசூல் செய்துள்ளனர் – துவராக கட்டுமான ஊழல் – ஆயூஸ்மான் பாரத் திட்ட ஊழல். இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் அத்தனையும் அம்பலத்திற்கு வரும்.நேற்று இரவு டெல்லி முதல்வர் கைது – பா.ஜ.கவின் தோல்வி பயம் தான் காரணம் …அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை இது – தனக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றினைந்து கூட்டணியை கூட்டி விட்டனர் என்கிற பயம் பா.ஜ.கவிற்கு.நான் கிளம்பும் போது அமைச்சர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் நடைபெற்றது.‌ ஆளுநர் அவராக கூப்பிடவில்லை – விடுவோமா நாங்கள்… நாங்கள் திமுக காரர்கள்… ஒரு மரியாதைக்கு பொக்கே கொடுத்து விட்டு – ராஜ் பவனில் இருந்து பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறேன் என ஆளுநரிடம் கூறினேன். ஜூன் – 4ம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி என்கிற அறிவிப்பு வர போகிறது – அது உங்களுக்கு தூக்கம் இல்லாமல் போக போகிறது. ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார் … பெங்களூருவில் வெடித்த குண்டிற்கு தமிழகர்களுக்கு சமம்தம் உண்டு என்று – தமிழர்களை நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் பேசுவீர்களா ? என பேசினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *