திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா டாக்டர் கி.வீரமணி தலைமையில் இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றி இளநிலை மற்றும் முதுநிலை மருந்தியல் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கி பாராட்டி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

இவ்விழாவில் இரண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள், 26 முதுநிலை மருந்தியல் மாணவர்கள் மற்றும் 97 இளநிலை மருந்தியல் மாணவர்கள் என மொத்தம் 125 பேர் பட்டங்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் இணை துணை வேந்தர் மல்லிகா , ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், மருந்தியல் கல்லூரியின் முதல்வர் செந்தாமரை, மருந்தியல் கல்லூரி ஆலோசகர் அன்புராஜ், துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
