திருச்சி பெரிய கம்மாளத்தெரு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் மற்றும் திருத்தக்கூடங்கள் கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வைத்து முதலாம் கால பூஜை இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜைகள் செய்யப்பட்டு இன்று காலை ஸ்ரீ பெரிய கம்மாளத்தெரு மகாமாரியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பெரிய கம்மாளத்தெரு , சின்ன கம்மாளத் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.